பொழுதுபோக்கு

பொங்கலை அலறவைத்த ‘அண்ணாத்த’.. ஆனாலும் இந்த படத்து சாதனையை முறியடிக்காம பேச்சே!

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா ரஜினியை வைத்து இயக்கிய படம் ‘அண்ணாத்த’. இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்தது. தீபாவளி கொண்டாட்டமாக திரையில் வெளியான அண்ணாத்த ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘அண்ணாத்த’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இப்படத்தில் ரஜினிக்கு தனது இறுதி பாடலை பாடினார்.

திரையரங்கில் 2021ஆம் ஆண்டு தீபாளிக்கு வெளியான ‘அண்ணாத்த’, 2022 பொங்கலுக்கு பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பானது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக சின்னத்திரையில் பல புதுப்படங்கள் ஒளிப்பரப்பானது. இந்த ரேஸில் ‘அண்ணாத்த’ முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ டிஆர்பி ரேட்டிங்கில் 17.37 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான போது 18.01 மில்லியன் பேர் பார்த்த படம் என டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை நீண்ட நாள்களாக தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago