பிக் போஸிற்கு செல்லப்போகிறீர்களா என்ற கேள்விக்கு ரஷிதா சொன்ன பதில்.

rachitha

சின்னத்திரையை பொறுத்தவரை மிகவும் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோக்கள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன.

Rachitha Mahalakshmi

இந்த நிலையில் யாரெல்லாம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் அவ்வப்போது வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இதில் பல சீசன்களாக இவர் இந்த முறை பிக் பாஸில் கலந்துகொள்ளப்போகிறார் என்று கூறப்பட்டவர் சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரஷிதா.

பிக் பாஸ் சீசன் 5 குறித்த அறிவிப்பு வெளியான உடனே, இவரிடம் சமூக வலைத்தளங்களில் பலர், இந்த முறை நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற போகிறீர்களா என்ற கேள்வியை வழக்கம் போல எழுப்ப துவங்கினர். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த நேர்காணல் ஒன்றில் அதற்கான பதிலை ரஷிதா கூறியுள்ளார்.

Rachitha Mahalakshmi

அவர் கூறியதாவது: பிக் பாஸ் சீசன் 1 முதல் எனக்கு பிக் பாஸ்ல் கலந்துகொள்ள அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் நான் இன்று வரை அதை மறுத்து தான் வருகிறேன். இந்த முறையும் எனக்கு அழைப்பு வந்தபோது, நான் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளேன், இல்லை என்றான் இந்தமுறை நான் நிச்சயம் பங்குபெற்றிருப்பேன் என்று நான் அவர்களிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறி உள்ளார்.

ஒரு வேலை அடுத்த சீசனில் இவர் பிக் போஸ்சில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இம்முறை அவர் பங்கேற்க வில்லை. தற்போது நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் இவர், இதுவரை கிட்டத்தட்ட 22 பட வாய்ப்புகளை தேதி ஒத்துவராததால் கைவிட்டதாக கூறியுள்ளார்.

Leave a Comment