விஜய் டீவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தொகுப்பாளினி ப்ரியங்காவின் முகம் பரிச்சயமாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவரும் மா.கா.பா ஆனந்தும் தான் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதே சமயம் ப்ரியகங்கா, ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்துகொள்ளப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
அந்த செய்தி உறுதியா இல்லை வெறும் புரளியா என்று ரசிகர்கள் குழம்பிக்கொண்டிருக்கும் வேலையில், பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவது உறுதி எனது கூறும் வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதாவது அவர் இதற்க்கு முன்பு தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தற்போது மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்குவது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 யில் பாரதி கண்ணம்மா சீரியலை சேர்ந்தவர்கள் பங்குபெறுகிறார்கள். அதை மா.கா.பா தொகுத்து வழங்குகிறார்.

இந்த புகைப்படம் வெளியான உடனே, அதை கண்ட ரசிகர்கள் பலர், அப்போ பிரியங்கா பிக் பாஸ் போவது உறுதிதானா என்று கமெண்ட் செய்துள்ளர்னர். அதே சமயம் மா.கா.பா தொகுத்து வழங்கினால் அது இன்னும் நகைச்சுவையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் பலர் அதற்க்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.