பிரச்சனையில் சிக்கிக் கொண்ட விஜய் சேதுபதி. இவரின் படத்தை வாங்க மறுக்கும் தியேட்டர் முதலாளிகள்

தமிழ் திரையுலகில் மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப் படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது இவர் நடித்து வெளியான பல படங்கள் மக்கள் எதிர்பார்த்த வகையில் இல்லை. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று படங்கள் என விஜய் சேதுபதியின் படங்கள் திரைக்கு வருகின்றன. அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் கதையை தேர்வு செய்வதில் தவறி விடுகிறார் விஜய் சேதுபதி.

vijaysethubathi

விஜய் சேதுபதி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்து அதன் பிறகுதான் ஹீரோவாக நடித்து இன்று தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மற்ற கதாநாயகர்களை விட தொடர்ந்து பல படங்களை விரைவாக வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியான விஜய் சேதுபதி மூன்று படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவின. இது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவே சொல்லலாம். இவ்வாறு தொடர் தோல்வியை தொடர்ந்து இவரது ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் படம் நடிக்க வேண்டும் என்பதை தவிர்த்து நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறியும் வருகின்றனர்.

vijaysethubathi
vijaysethubathi

யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல இரண்டு காதல், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி திரையில் வெளியாவதற்கு தயாராக உள்ளன. ஆனால் ரசிகர்கள் இதுவரை தோல்வியடைந்த படங்களைப் போலவே இந்தப் படங்களும் அவ்வாறு ஆகிவிடுமோ என்ற எண்ணத்திலும் ஒருசிலர் இந்த படங்களாவது எதிர்பார்த்த வகையில் வெற்றியடையுமா? என்ற ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் விஜய் சேதுபதி தானே தயாரித்து நடித்துள்ள முகில் படமும் திரைக்கு வர தயாராகி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ரெஜினா மற்றும் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த முகில் திரைப்படத்தை வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையில் வெளியிடுவதாக விஜய் சேதுபதி முடிவு செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த படத்தின் வெளியீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

mugil
mugil

விஜய் சேதுபதியின் முகில் படத்தின் திரை காட்சிகளின் மொத்த நேரமே 62 நிமிடங்கள் தானாம். எனவே இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால் திரைப்படத்தின் இடைவேளை நேரம் மாறுபடும் என்பதற்காக திரை அரங்கு முதலாளிகள் முகில் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை மறுத்துள்ளனர்.

இவ்வாறான பிரச்சனையில் மாட்டிக் கொண்ட விஜய் சேதுபதி இப்பொழுது முகில் திரைப்படத்தை எவ்வாறு வெளியிடுவது என்பதை பற்றி யோசித்து வருகிறாராம். எனவே இப்படம் OTT தளத்தில் வெளி வர அதிக வாய்ப்புகள் உள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Comment