நடிகை அமலாபாலை போலவே டாக்டர் பட கதாநாயகிக்கும் வந்திருக்கும் புதிய பிரச்சனை. இதிலிருந்து இவர் எப்படி தப்பிக்க போகிறார்

doc

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் சரி, பிரபலமடைந்த நடிகைகளுக்கும் சரி எப்பொழுதும் பிரச்சனைகள் வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஒருவரின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக பலரும் போட்டி போட்டுக் கொண்டு பல பிரச்சினைகளை உருவாக்கி வருவார்கள். தேவையில்லாத கிசுகிசுக்கள், அவர்கள் தற்செயலாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலை இவ்வாறு ஏதாவது ஒரு விஷயத்தை கண்டறிந்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவர்களின் முன்னேற்றத்தை நிலைகுலைய செய்வதே பலரின் வழக்கமாகஇருக்ககிறது. தற்போது டாக்டர் பட கதாநாயகிக்கும் இதுபோன்ற ஒரு பிரச்சனை தான் வந்திருக்கிறது. இதிலிருந்து இவர் எப்படி வெளி வர போகிறார் என்று பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

priyanka
priyanka

கதாநாயகிகள் கிளாமராக நடிப்பதும், ஐட்டம் பாடல்களில் நடனம் ஆடுவதும் இது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமானவையாக தான் இருக்கும். ஆனால் கிளாமரையும் தாண்டி எந்த ஒரு நடிகை குடும்பப்பாங்காகவும், குறும்புத்தனமாகவும், துடுக்கு தனமாகவும் தோற்றமளிக்கிறாரோ அவரரையே ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகையாக வைத்துக்கொள்வார்கள். அவ்வாறு பலரின் மனதிலும் இடம் பெற்றுள்ள நடிகைகள் தான், நஸ்ரியா, சாய் பல்லவி போன்றோர் தற்போது இந்த வரிசையில் டாக்டர் பட கதாநாயகியான பிரியங்கா மோகனும் சேர்ந்துள்ளார்.

கதாநாயகியாக இருக்கும் பல நடிகைகளும் முதன் முதலில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஏதேனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அல்லது குறும்படங்களில் நடித்த பிறகுதான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் தான் இப்பொழுது கதாநாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, தமன்னா, திரிஷா, அமலா பால் போன்ற பலரும்.

priyanka-mohan
priyanka-mohan

பிரியங்கா மோகன் நடித்த மாயன், டிக் டாக் போன்ற திரைப்படங்கள் திரையில் வருவதற்கு முன்னரே டாக்டர் படம் திரையில் வெளியிடப்பட்டு தற்போது பிரியங்காவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் படத்தில் தோன்றும் முதல் காட்சியே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கொண்டாட்டமாக வரவேற்கப்படுகிறது. அந்த அளவிற்கு பலரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் பிரியங்கா.

பிரியங்காவை பிடித்துப் போன ரசிகர்கள் அவரைப் பற்றிய தகவல்களை இணைய தளத்தில் தேட ஆரம்பித்தனர். டிக் டாக் படத்தில் இவரது காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டாம் எனவும், பிரியங்கா மோகனை க்யூட்டாக மட்டுமே பார்க்க விரும்புகிறோம் அவரின் கிளாமரான காட்சிகள் நிறைந்த டிக்டாக் படத்தை வெளியிட வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் டாக்டர் படத்தில் பிரியங்காவிற்க்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து டிக்டக் படக்குழு அந்த படத்தின் தம்லைனில் தற்பொழுது பிரியங்காவின் படத்தை சேர்த்துள்ளனர். இந்த புகைப்படம் ஐந்து லட்சம் வியூஸ்களைத் தாண்டி சென்றிருக்கிறது.

sindhusamaveli
sindhusamaveli

இப்படித்தான் நடிகை அமலாபாலும் மைனா படத்தின் மூலம் ஹிட்டானதும் அவர் அதற்கு முன்பு நடித்த சிந்து சமவெளி படம் திரையில் வெளியிடப்பட்ட அவருக்கு தேவை இல்லாத தலை வலி உண்டானது. அதுபோல இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என தனக்கென ஒரு பெரிய இடத்தை பெற்றிருக்கும் நயன்தாராவும் நான்கு வருடத்திற்கு முன்னர் ஜெயம் பட வில்லன் கோபிசந்துடன் இணைந்து நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல சலசலப்பபுகளை ஏற்படுத்தியுள்ளது.

tictok
tictok

இவ்வாறு ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை சந்தித்து தான் அதனை தாண்டி உயர்ந்த இடத்திற்கு வருகிறார்கள் அதுபோல நடிகை பிரியங்கா மோகனும் இந்தபிரச்சனையயை கடந்து தமிழ் திரையுலகின் கனவு கன்னியாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment