Homeபுகைப்பட செய்திஅட என்ன இப்படி ஒரு ஆடை என்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

அட என்ன இப்படி ஒரு ஆடை என்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அனைத்து இல்லங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இயல்பாகவே நடக்கின்ற சூழ்நிலைகளை போன்றே இந்த நாடகத்தில் அனைத்து காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக இருப்பவர்தான் நடிகை ஹேமா. தற்போது இவர் தனது மாடலான புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வகையில் கலாய்த்து வருகிறார்கள்.

meena

நடிகை ஹேமா சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு தனி சேனல் தொடங்கி அதில் பியூட்டி டிப்ஸ், சமையல் டிப்ஸ் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். ஹேமா என்றால் இவரை பலருக்கும் தெரிவதில்லை. மீனா என்று சொல்லி தான் அனைவரும் இவரை அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவர் இரண்டாவது மருமகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பணக்கார வீட்டில் பெண்ணாக பிறந்து மளிகை ஸ்டோர் நடத்திக்கொண்டிருக்கும் குடும்பத்திற்கு மருமகளாக செல்கிறார். பிறந்த வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும் மீனா தனது புகுந்த வீட்டில் எவ்வாறு நடந்து கொள்கிறார் எனவும், குடும்பத்தில் அனைவருடனும் எவ்வாறு ஒத்துப் போகிறார் என பல்வேறு சூழ்நிலைகளில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் சிறப்புடன் செய்து வருகிறார்.

meena

ஹேமாவை திட்டித்தீர்த்த ரசிகர்களும் இவருடைய அழகான நடிப்பால் தற்போது இவரை புகழ்ந்து வருகிறார்கள். இந்தத் தொடரில் சில நேரங்களில் வில்லத்தனத்தை சொல்லும் வில்லியாகவும், ஒரு சில சமயம் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் தோற்றமளிக்கிறார். அதனாலேயே பல ரசிகர்களுக்கு இவரை பிடித்திருக்கிறது.

தனது கணவரான ஜீவாவுடன் அடிக்கடி சண்டை போடுவது இத்தொடரில் மிகவும் ரசிக்கும் காட்சியாக இருக்கிறது இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதிலும் காமெடி செய்யும் வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் ஹேமா ஹேமா கலக்கி வருகிறார்.

meena

தற்போது பல கதாநாயகிகளை போலவே இவரும் தனது புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவ்வாறு இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கண்றாவியான ஆடை என்று இவரின் உடையைப் பற்றி கமண்ட் செய்து வருகிறார்கள்.

சற்று முன்