Homeபிக் பாஸ்பிக் பாஸில் கலந்துகொள்ள போகும் மற்றொரு திருநங்கை. இந்த முறை நிகழ்ச்சி கலை கட்டும் போலயே.

பிக் பாஸில் கலந்துகொள்ள போகும் மற்றொரு திருநங்கை. இந்த முறை நிகழ்ச்சி கலை கட்டும் போலயே.

பிக் பாஸ் சீசன் 1ல் தொடங்கி தற்போது நடைபெற இருக்கும் சீசன் வரை அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்க தான் செய்கிறது. அதே சமயம் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் பலரிடம் உண்டு. அந்த வகையில் இந்த முறை பலரது பெயர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

bigg-boss

ஏற்கனவே ஷகிலாவின் மகளான திருநங்கை மிலா இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார் என்ற ஒரு தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக மற்றொரு திருநங்கையான “நமிதா மாரிமுத்து” பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கு பெறுவார் என்ற தகவல் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

யார் இந்த நமிதா மாரிமுத்து:
இவர் ஒரு மாடல். இந்தியா சார்பில் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனலில் பங்கேற்ற முதல் இந்திய திருநங்கை இவர் தான். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள் 2 படத்தில் இவரை நாம் பார்த்திருப்போம்.

namitha marimuthu

திருநங்கைகள் சம்பந்தமான பலவேறு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பலவற்றில் இவர் வெற்றியும் பெற்றுள்ளார். 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவற்றை இவர் வென்றுள்ளார்.

namitha marimuthu

ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது அதே பார்முலாவை தமிழிலும் உபயோகிக்கிக்க எண்ணி உள்ளார்கள் போலும். நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சற்று முன்