கடந்த 2001ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1” படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் SS இராஜமௌலி, வயது 48, கருநாடக மாநிலம் மைசூரில் பிறந்து வளர்ந்த இயக்குநர் மற்றும் எழுத்தாளர். இவர் பிரபல இயக்குநரும், எழுத்தாளருமான வி.விஜயேந்திரபிரசாத்தின் மகன் ஆவார்.

இராஜமௌலி இது வரை 12 படங்கள் இயக்கி உள்ளார். இவைகளில் 3 படங்கள் (பாகுபலி 1, பாகுபலி 2, RRR) பேன் இந்தியா படங்கள் ஆகும். இவர் இயக்கிய 12 படங்களுமே சூப்பர் ஹிட் தான். இதனால் இவர் படத்தில் நடிப்பதற்காக தென்னிந்திய திரை பிரபலங்கள் பலர் தவமாய் தவம் இருக்கிறார்கள்.
இவர் இயக்கிய “பாகுபலி 2 (தி கன்க்லூசன்) படம் இந்தியாவிலே அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்த படம் ஆகும். இந்த நிலையில் தற்போது கனடா நாட்டில் நடைபெறும் “டொரொன்டொ இன்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல்” நிகழ்ச்சியில் பங்கேற்க கனடா சென்றுள்ள இயக்குநர் இராஜமௌளி தன்னுடைய அடுத்த படம் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.

“என்னுடைய அடுத்த படம் ஒரு பேன் இந்தியா படமாக ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இருக்கும், இந்த படத்தில் நடிகர் மஹேஷ் பாபு நாயகனாக நடிப்பார், இந்த படம் ஜேம்ஸ் பான்ட், இந்தியானா ஜோன்ஸ் போன்ற படங்களுக்கு நிகராக இருக்கும்” என்று கூறியுள்ளார் இயக்குநர் இராஜமௌளி.
இது குறித்து நடிகர் மஹேஷ் பாபுவிடம் கேட்டதற்கு “ என் குரு இராஜமௌளி படத்தில் நடிப்பது என்பது என் கனவு, அது இப்போது நனவாகி உள்ளது. இராஜமௌளி சார் படத்தில் நடிப்பது 25 படங்களில் நடிப்பதற்கு சமம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 
பிரபல இயக்குநர் இராஜமௌலி சார் இயக்கத்தில் நடிகர் மஹேஷ் பாபு நடிப்பில் ஜேம்ஸ் பான்ட், இந்தியானா ஜோன்ஸ் மாதிரியான படம் என்றால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம ஆக்ஷன் விருந்தாக தான் அமையும் என்று திரை வட்டார பிரபலங்கள் பேசி வருகிறார்கள். இந்த கட்டுரை பிடித்திருந்தால் லைக் பன்னுங்க, உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே…