கோலிவுட்டில் இளம் இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக உள்ளார். அனிருத்தின் துள்ளல் இசை பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனிருத் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதே போன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்திற்கும் கமல் நடிப்பில் உருவாகிவரும் ‘விக்ரம்’ படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அனிருத் குறித்தான தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அதன்படி, அனிருத் பிற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் பாடல்களுக்கு பாடிவருகிறார். இதுவரை அவர் பிற இசையமைப்பாளர்கள் இசையில் சுமார் 175 பாடல்கள் பாடியுள்ளாராம். ஆனால் இதுவரை அவர் அப்படி பாடு பாடல்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம். பிற இசையமைப்பாளர்களுடன் நட்பு வளர்க்கவே அவர் இப்படி செய்யதுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தகவலால் ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள், சினிமாவில் வந்த நாள் முதல் தற்போது வரை பாடலில் ஹிட் கொடுக்கும் அனிருத், அவர் நினைத்திருந்தால் ஒரு பாடலுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் சம்பளமாக பெறலாம். ஆனால் காசே வாங்கத அனிருத்துக்கு என்ன தங்கமான மனசு என புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

ஒரு சிலர் இந்த பாடலுக்கு சம்பளமாக வங்கி இருந்தால் இப்போ வாடகை குடுக்காம ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இருந்திருக்காது அனிருத் என கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஸ்டூடியோவிற்கு வாடகை கொடுக்காமல் அனிருத் மும்பைக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது.