80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் மண்வாசனை என்ற படத்தில் முதன்முறையாக அறிமுக கதாநாயகியாக நடித்தார். நடிகை ரேவதி முதல்படமே எதிர்பாராத வகையில் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அவரின் அழகிய முகம் பேசும் கண்கள் அளவான உயரம் போன்ற அவரின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் யார் இந்த நடிகை என்ற அளவிற்கு அனைவராலும் பேசும்படியாக இருந்தார் நடிகை ரேவதி.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அதன்பின் அடுக்கடுக்காக பல படங்களில் ஒப்பந்தமானார். அந்த அளவிற்கு அவரின் நடிப்பு அவ்வளவு எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. ஆனால் ரேவதிக்கு தான் டாக்டராக வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. ஆனால் அவரது நடிப்பு திறமை அனைவராலும் வெகுவாக பாராட்ட பட்டதால்
தனக்கிருந்த டாக்டராகும் ஆசையை விட்டுவிட்டு தனது நடிப்பில் ஆர்வத்தை செலுத்தினார். இதனால் அவரது இருபதாவது வயதிலேயே மிகப் பெரிய நடிகை என்ற உச்சத்தை அடைந்தவர் தான் நடிகை ரேவதி.
மிகக் குறுகிய காலகட்டத்தில் நிறைய விருதுகளை வாங்கி குவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், முறளி போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் பல படங்கள் வெற்றிப் படங்களாகத்தான் இருந்தன. பிறகு படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடன் நடித்த சுரேஷ் சந்திர மேனன் என்பவருடன் காதல் வயப்பட்ட நடிகை ரேவதி அவரையே மணம்முடித்தும் கொண்டார்.

அவர்களின் இல்லற வாழ்க்கை நன்கு நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக மணமுறிவு ஏற்பட்டது. எனவே கணவன் மனைவி இருவரும் கடந்த 2002ஆம் ஆண்டு மனமொத்த விவாகரத்து பெற்றனர்.
இதனால் மனமுடைந்த ரேவதி சற்று காலங்கள் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு தனது எதிர்கால முன்னேற்றத்திற்காக படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் இவருக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. தனது நாற்பத்தி மூன்றாம் வயதில் தான் ரேவதி அவர்கள் தனது மகளை பெற்றெடுத்தார்.
ஒரு நல்ல நடிகையாகவும், இயக்குனராகவும் வலம் வரும் ரேவதி தனது குடும்ப வாழ்க்கையில் தவறான முடிவை எடுத்து விட்டதாக அவரது நலம் விரும்பிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாத ரேவதி தனது நடிப்பு பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர் நடித்த ஜாக்பாட், குலேபகாவலி, நவரசா போன்ற படங்கள் அனைத்து சூப்பர் ஹிட் கொடுத்தன. மேலும் தனது பெண்ணையும் நன்கு வளர்த்து வருகிறார்.