வேற லெவல்! மாஸ் ட்ரெய்லர் வெளியான உற்சாகத்தில் சிம்புவின் ரசிகர்கள். மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அவரை கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள்

Maanadu

தயாரிப்பாளர் சுரேஷ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படம் மாநாடு. சிம்புவின் அனைத்து ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கும் இப் படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி மிகவும் பிரமாண்டமாக உள்ளது. எந்த இடத்திலும் சிறிதும் சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இந்த ட்ரெய்லர் திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக இத்திரைப்படத்தின் மிக முக்கிய தோற்றத்தில் நடித்துள்ள எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பும் அவரது ஆக்ஷனும் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும்.

venkat
venkat

பிரேம்ஜி, எஸ்ஏ சந்திரசேகரன், விஜி மகேந்திரன் ஆகியோர் நடிப்பும் இந்த ட்ரெய்லரில் மிகவும் சூப்பராக தான் உள்ளது. தற்பொழுது manadu trailer (மாநாடு ட்ரெய்லர்) என்று சிம்புவின் ரசிகர்களால் பரப்பப்படும் இது தான் இந்திய அளவில் இன்றைக்கு டாப்பாக உள்ளது. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை வேற லெவல் பலமாக படத்திற்கு அமைந்துள்ளது. சிம்புவின் ரசிகர்கள் இந்தப் படத்தின் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிம்புவின் இப்படட்ரைலர் வந்திருப்பது தான் சிம்புவின் ரசிகர்களுக்கு பெரிய ஆறுதலாகவும், ஆனந்த இன்பத்தையும் தந்துள்ளது.

நெட்டிசன்கள் பலரும் இந்த ட்ரைலரை பார்த்து கொண்டாடி வருகின்றனர். சிம்பு ராக்ஸ் என்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது என்றும் புகழாரம் சூட்டி வருகின்றனர். நீண்ட ஆண்டிற்கு பிறகு ஒரு சென்சேஷனல் படத்தில் சிம்பு நடித்திருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் பல நெட்டிசன்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தின் டிரெய்லரை ஏ ஆர் முருகதாஸ் நிவின்பாலி, நானி ரஷீத் செட்டி ஆகியோர் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

simbu1
simbu

இப்படம் தமிழ் அல்லாது மற்ற நான்கு மொழிகளிலும் வெளியிடப்படுவதால் தமிழ் மற்றும் மலையாளத்தில் மாநாடு என்ற தலைப்பிலும் மற்ற மொழிகளில் Time loop என்ற தலைப்பிலும் இப்படம் வெளியாக இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படுவதாக உறுதியான தகவல்கள் வந்துள்ள நிலையில் இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு கண்டிப்பாக போட்டி படமாக அமையும் என்று தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர்கள் மூலம் மிகத் தெளிவாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து இப்படம் உருவாகி இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் இப்படம் வெற்றிபெற அனைத்து ரசிகர்களும் இப்பொழுதே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை சிம்பு அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment