சினிமா நடிகைகள் புதிய பட வாய்ப்புகளை பெறவும், தொழில் போட்டியை சமாளித்து முன்னனி நாயகியாக வலம் வரவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிப்பதுடன் கிளாமர் ஆடைகளிலும் பிரத்யேக போட்டோஷூட்களில் பங்கேற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வருபவர் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ், வயது 29. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். பிரபல நடிகை மேனகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான பைலட் என்ற மலையாள படத்தின் மூலமாக தன் கலை பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் திரை உலகில் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” படத்தின் மூலமாக பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னனி நாயகர்களுக்கு ஜோடியாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான “அண்ணாத்தே” படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கொஞ்சம் குண்டாக செம்ம அழகாக காட்சியளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இதனால் தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளித்தார். இதன் பயனாக கடந்த ஆண்டு குட் லக் சகி (தெலுங்கு), சர்காரு வாரி பாட்டா (தெலுங்கு) மற்றும் சாணிக்காயிதம் (தமிழ்) உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
இதில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக செம்ம கிளாமராக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது கிளாமரான ஆடைகளில் பங்கேற்று பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்பதியயும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.