முதன்முதலில் வாணிபோஜன் அவர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் மூலமாகவே அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். இத்தொடரில் அவரது கதாபாத்திரமும், இயல்பான நடிப்பும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த தொடரில் நடிக்கும் பொழுதே இவரது ரசிகர்கள் பலர் இவர் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்று கூறி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என்றும் செல்லமாக அழைத்து வந்தனர்.

வாணி போஜன் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் பிறந்தவர். அங்கிருக்கும் ஒரு நல்ல பள்ளியில் தனது படிப்பை முடித்து அதன்பிறகு விமான பணிப்பெண்ணாக பணி புரிந்து வந்தார். இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்களில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுதே வாணி போஜன் அந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு பதிவிட்டிருக்கிறார். ஆனால் இவர் நிர்வாக படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதற்காக அந்த வேலை அவருக்கு நிராகரிக்கப்பட்டது.
அதன்பிறகு பணி பெண்ணாகவும் தனது பணியை தொடர முடியாத காரணத்தினால் அங்கிருந்து வெளிவந்து மாடலிங்கில் நுழைந்தார். மாடலிங்கில் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதே வாணிபூஜன் அவர்களுக்கு சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தானாக தேடி வந்தது.

அதன் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வாணிபூஜன் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இதன் பிறகுதான் சன் டிவியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஜு தொலைக்காட்சியிலும் ஒரு தொடரின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு தொடர்களும் வாணிபூஜனுக்கு மிகப்பெரிய வெற்றி தொடராக அமைந்திருந்தன.
அதன்பிறகு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்திருந்த வாணிபூஜனின் கதாபாத்திரமும் சிறந்த முறையில் பேசப்பட்டது. பிறகு ட்ரிபிள்ஸ் எனப்படும் ஒரு வெப் சீரியஸில் நடிப்பதற்கான வாய்ப்பு வாணி போஜனுக்கு கிடைத்தது. அதிலும் தனது நடிப்பு திறமையை அழகாக காண்பித்திருந்தார்.

அதன்பிறகு சீரியல்களிலும், படங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார் வாணிபோஜன். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னரே இவருக்கு திருமணமாகியிருந்தது. இதனை மறைத்து தான் இவர் திரையுலகிற்கு நடிக்க வந்துள்ளார். இவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட்டானதும் கணவரை நிரந்தரமாக பிரிந்து விட்டார் என கூறப்படுகிறது. கணவர் எவ்வளவோ முயற்சி செய்தும் வாணிபூஜன் அவரை தன்னுடன் சேர்த்துக் கொள்ளாததற்கு காரணம் அந்த 37 வயது இளம் நடிகர் தான் என்று திரை வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.
அவர் யார் என்று தெரியுமா? அவர்தான் சுப்பிரமணியபுரம் படத்தின் கதாநாயகனாக நடித்த ஜெய் அவர்கள். தற்போது இவர் தான் வாணிபோஜனுடன் ஒன்றாகக் குடித்தனம் நடத்தி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அஞ்சலியுடன் லிவ்விங் டு கெதரிலிருந்த ஜெய்யிற்க்கு பட வாய்ப்புகள் குறைந்த கொண்டிருந்த சமயத்தில்தான் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரியஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில்தான் வாணிபூஜன் ஜெய் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இதற்கான படப்பிடிப்பின் போதுதான் இருவரும் காதல் வயப்பட்டதாகவும், இந்த படப்பிடிப்பின் நெருக்கமான காட்சிகளின் பொழுது இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தன்னுடன் வந்துவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்த தனது கணவரிடமிருந்து நிரந்தரமாக பிரிவதற்காக ஜெய்யுடன் ஒன்றாக இருந்து வருவதாகவும், இவ்வாறு கணவன் இருக்கும்பொழுதே இன்னொரு ஆணுடன் சேர்ந்து இருப்பது சரியா என்ற பல விதமான பேச்சுகளும் தற்போது கோடம்பாக்கம் முழுவதும் பேசப்பட்டுவருகிறது.