தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின் தனது கடின உழைப்பால் நடிகராக உயர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பிஸியான நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்து பத்து படங்களிலாவது நடித்து விடுவார்.

விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் தடம் பதித்துள்ளார். தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த விஜய்சேதுபதி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி திரைப்படங்களை தவிர வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். வெப் சீரிஸும் திரைப்படங்களை போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு பெற்று வருவதால் வெப் சீரிஸிலும் நடிக்க விஜய்சேதுபதி ஆர்வம் காட்டிவருகிறார்.

இந்நிலையில், ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்புடன் அழைக்கப்படும் விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/gSpnjtnHYM
— Kamal Haasan (@ikamalhaasan) January 16, 2022
அந்தவகையில், உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.