தமிழ் திரை உலகில் கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குநர் A சர்குணம் இயக்கத்தில் நடிகர்கள் விமல், பாக்கியராஜ், பொன்வன்னன் ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் “வாகை சூடவா”. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் இளம் நடிகை இனியா.

நடிகை இனியாவின் இயற்பெயர் ஸ்ருதி சாவந்த், வயது 34, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2005ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் வெளியான “சாய்ரா” படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை இனியா.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னனி நாயகியாக வலம் வந்த நடிகை இனியா ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடன கலைஞரான நடிகை இனியா பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் டைட்டில் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை இனியா தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான “விலங்கு” என்ற தமிழ் வெப் சீரிசில் நடிகர் விமலின் மனைவியாக நடித்திருந்த நடிகை இனியா புதிய பட வாய்ப்புகளுக்காக பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டதை ஒட்டி நடிகை இனியா பச்சை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற கேரள பாரம்பரிய ஓணம் புடவையில் செம்ம அட்டகாசமான போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். ரசிகர்களை கிரங்கடிக்கும் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.