Homeபொழுதுபோக்குவிஜய்சேதுபதியை ஓவர் டேக் பண்ணுவாரா ஹிருத்திக். எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள்

விஜய்சேதுபதியை ஓவர் டேக் பண்ணுவாரா ஹிருத்திக். எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள்

மாதவன் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியானப்படம் விக்ரம் வேதா. இப்படத்தை கணவன் மனைவியான காயத்திரி – புஷ்கர் இணைந்து இயக்கியிருந்தனர். மாறுப்பட்ட கதைகளத்தை கொண்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்தியிலும் காயத்ரி – புஷ்கரே இயக்கி வருகின்றனர். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் மாதவன் கதாபாத்திரத்தில் சைய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். இப்படத்தை ரிலைன்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

துபாயில் விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பாலிவுட் ரசிகர்களுக்கு தகுந்தாற்போல் இந்தியில் இப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் கொண்டுவந்து எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்று (ஜனவரி 10) ஹிருத்திக் ரோஷனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

hri

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹிருத்திக் ரோஷன் கருப்பு கண்ணாடி அணிந்து முகத்தில் ரத்தக்கறையுடன் தோன்றியுள்ளார். இந்த லுக்கை பார்த்த நெட்டிசன்கள் விஜய்சேதுபதியின் நடிப்பை ஹிருத்திக் ரோஷன் முறியடித்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சற்று முன்