Homeடிவிபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மாற்றம்? இந்த மாற்றத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மாற்றம்? இந்த மாற்றத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

சீரியல்களில் ஒரு நடிகர் அல்லது நடிகை  திடீரென்று சில காரணங்களுக்காக விலகுகிறார் என்றால் இவருக்கு பதில் இவர் என்று போட்டு நிர்வாகம் சமாளித்து விடும். ஆனால் இதேபோல் அடிக்கடி நடிகைகள் மாற்றம் ஏற்பட்டால் பிடித்த நடிகர்கள்  மாறிவிட்டனர்  தொடர்ந்து இந்த சீரியலை பார்க்கலாமா வேண்டாமா என்று ரசிகர்கள் மனதில் ஒரு வெறுப்பு உண்டாகும் அந்த சீரியலை புறக்கணிக்க நேரிடும்.

aiswarya serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். இதில் மூர்த்தி தனம் ஜீவா, மீனா,  கதிர்,  முல்லை மற்றும் கண்ணன் கதாபாத்திரங்கள்  ரசிகர்களின் மனதை கவர்ந்த கதாபாத்திரம் ஆகும். கடந்த வருடம் சித்ராவின் மறைவு இந்த சீரியலை தவறாமல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. நடிகை சித்ராவுக்கு பதில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காவியா அறிவுமணி ஒப்பந்தம் ஆகினார்.பின்னர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடையில் வேலை பார்க்கும் நெல்லை சிவா காலமானார். தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் மூர்த்தியின் தாயார் இறந்து விடுவது போல காட்சிகள் வெளியாகியிருந்தது. இந்த சமயத்தில் மற்றுமொரு நடிகை மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

saai gayathri

கண்ணனுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா கேரக்டரில் தான் அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது இதற்கு முன்னரும் ஐஸ்வர்யா கேரக்டரை மாற்றி இருந்தனர்.தற்பொழுது புதிய ஐஸ்வர்யா வாக சாய் காயத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இன்று முதல் அவரது காட்சிகள் இடம்பெறும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சாய் காயத்ரி ஏற்கனவே கனா காணும் காலங்கள் என்ற விஜய் டிவியின் முத்திரை பதித்த சீரியலில் நடித்திருக்கிறார் அதன் பின்னர் தற்பொழுது முடிவுக்கு வந்த ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் அகிலா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த சூழ்நிலையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயலில் புதிய ஐஸ்வர்யா வாக நடிகை காயத்ரி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளதா என்று ரசிகர்களை தான் கேட்க வேண்டும்.

ஒரு முன்னணி தொலைக்காட்சியில் பூ பெயரில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியலில் ஹீரோவை மாற்றிய பிறகு அதன் பார்வையாளர்கள் குறைந்து விட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று அடிக்கடி  போடப்படுவது வழக்கமான ஒன்றாக போய்விட்டது. ஆனால் ரசிகர்கள் அவர்களுக்கு பிடிதத நடிகர்கள் இல்லையெனில் சீரியலை பார்க்க விரும்புவதில்லை.

சற்று முன்