சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலம் ஆனவர் தான் நடிகை அனுஷ்கா. இதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1, 2 என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை அனுஷ்கா.

அழகு பதுமையாகவும் வீரமிக்க பெண்ணாகவும் தேவசேனா கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு விஷயம். ஆனால் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து , அதற்கு பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் போனதினால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்தச் செய்தி தான் தற்போது சினிமா துறையில் இருக்கும் பரபரப்பான செய்தியாகும். இ டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி அனுஷ்காவின் திருமண விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு தனியார் விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வீட்டி என தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அனுஷ்கா தன் திருமணம் தொடர்பான இந்த வதந்திகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. அனுஷ்கா கடந்த காலத்தில் பல்வேறு பிரபலங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததாகவும் இதற்கு முன்னர் பல வதந்திகள் வந்திருக்கின்றன.
அதேபோல் பாகுபலி படத்திற்கு பிறகு அவர் பிரபாஸுடன் டேட்டிங் செல்வதாகவும் வதந்திகள் பரவியது. மேலும் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்தன. வதந்திகள் தீயைப் போல் பரவியதால் தனது மவுனத்தை கலைத்து அனைத்து வதந்திகளையும் நிராகரித்தார் அனுஷ்கா. மேலும் பிரபாஸை தனக்கு 15 வருடங்களுக்கு மேலாக தெரியும் அவர் எனது 3 AM நண்பர்களில் ஒருவர் என்றும் கூறியிருந்தார். நாங்கள் இருவரும் ஸ்க்ரீனில் ஒரு அற்புதமான ஜோடியாக நடிக்கிறோமே தவிர வேறு ஒன்றுமில்லை என உறுதிப் பூர்வமாக தெரிவித்திருந்தார்.

மேலும் எங்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது இருந்திருந்தால் இந்த நேரத்தில் அது வெளியே வந்திருக்கும் என்று அவர் முன்னரே குறிப்பிட்டிருந்தார். இதோடு மட்டுமில்லாமல் அனுஷ்கா ஒரு கிரிக்கெட் வீரரை காதலிப்பதாகவும் ஒரு சிலர் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் இவை அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும் தான் திருமணம் செய்து கொள்ளும் போது கண்டிப்பாக நானே அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தெலுங்கு இயக்குனர் ஒருவரை தான் நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக புதிய தகவல்கள் இணையதளத்தில் கசிந்து கொண்டிருக்கின்றன. அஆனால் இது குறித்து நடிகை அனுஷ்கா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருகிறார்