Homeபிக் பாஸ்பிக் பாஸிற்கு செல்கிறாரா ஜிபி முத்து? பிக் பாஸ் செட்டில் இருந்து அவரே வெளியிட்ட போட்டோ...

பிக் பாஸிற்கு செல்கிறாரா ஜிபி முத்து? பிக் பாஸ் செட்டில் இருந்து அவரே வெளியிட்ட போட்டோ இதோ.

சமூக வலைதளங்களில் இருக்கும் அனைவருக்கும் ஜிபி முத்து பரிட்சயம். டிக் டாக்கில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஜிபி முத்து, டிக் டாக் முடக்கப்பட்ட பிறகு, வலைஒளி, இன்ஸ்டாகிராம் இப்படி பிற சமூக வலைதளங்களில் தன் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

gp muthu

வணக்கம் நண்பர்களே என்று இவர் ஆரமிக்கும் ஸ்டைலே தனி ரகம் தான். பல பேர் எவ்வளவோ செலவு செய்து வீடியோ பதிவிடுகையில், பெரிதாக எந்த ஒரு செலவும் இல்லாமல், வெறும் மொபைலை கொண்டு வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பெரிய அளவில் புகழ்பெற்ற பெருமை இவரை சாரும்.

இன்றைய சூழலில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மரக்கடை வியாபாரியாக இருந்த இவர், தற்போது முழு நேர யூடியுபறாகவும் நடிகராகவும் மாறிவிட்டார். பல யூடியுப் சானல்கள் இவரை அணுகி நேர்காணல் எடுப்பது, பிராங்க் வீடியோ எடுப்பது இப்படி பலவற்றை செய்கின்றனர்.

gp muthu

அதோடு இல்லாமல் அண்ணன் தற்போது பல சார்ட் பிலிம்களிலும், திரைப்படங்களிலும் பிசியாக உள்ளார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வருடா வருடம் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ஜிபி முத்து கலந்துகொள்வார் என்று அடிக்கடி அதிகாரபூர்வமற்ற செய்திகள் பரவி வந்தன.

இப்படி இருக்கையில், இன்று ஜிபி முத்து தனது முகநூல் பக்கத்தில், பிக் பாஸ் செட்டிற்கு முன்பு நின்று கொண்டு போஸ் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.

gp muthu

ஒருவேளை பிக் பாசில் கலந்துகொள்ள போகிறாரா? அல்லது சும்மா அந்த பக்கம் போன சமயத்தில் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டாரா என்று தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் துவங்க இருப்பதால், ஒருவேளை ஜிபி முத்து சில நாட்கள் கோரன்டைனில் இருந்தால் அவர் நிச்சயம் பிக் பாசில் கலந்துகொள்வார் என்பதை நாம் உறுதி செய்யலாம். அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

சற்று முன்