தொன்னூறுகளின் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் ஆர்யா அவர்கள் உள்ளம் கேட்குமே என்ற படம் மூலம் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார். இயக்குனர் ஜீவா அவர்கள் இயக்கிய உள்ளம் கேட்குமே படத்தில் ஷாம், லைலாவை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள் தான். அதில் அனைத்து ரசிகர்களாலும் குறிப்பிட்டு பேசப்பட்டவர் நடிகர் திரு ஆர்யா அவர்கள். தனது முதல் படத்தில் இவரின் நடிப்புத்திறன் பேசும் அளவிற்கு இல்லையென்றாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். அவரது கண்களுக்காகவே பெண் ரசிகர்கள் ஏராளமானார்கள்.

இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார். பூஜா, ஆர்யா இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்படத்தில் மிகவும் அழகாக இருந்தது. இதனாலேயே பூஜா, ஆர்யா இருவரும் அடிக்கடி சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டார்கள். அதன் பின்னர் ஆர்யா அவர்கள் நடித்திருந்த அறிந்தும் அறியாமலும் வேறு ஒரு கெட்டப்பில் அவரை பிரதிபலித்தது. அன்புக்காக ஏங்கும் மகனாகவும், அண்ணனாகவும் இப்படத்தில் ஒரு ரவுடி மற்றும் தாதாவாக நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் ஆர்யாவின் தீப்பிடிக்க பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது.
அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ஆர்யாவின் சினிமா பயணத்தின் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் தான் நான் கடவுள். டைரக்டர் பாலா அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிகை பூஜா இருவரும் சேர்ந்து நடித்த படம் நான் கடவுள். இதில் நடிகர் ஆர்யா அவர்கள் அகோரியாக நடித்திருப்பார். முழுப்படமும் காசியிலேயே படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக ஆர்யா அவர்கள் தன்னை முழுமையாக வருத்திக் கொண்டு அதற்கான மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு இப்படத்தில் நடித்து முடித்திருந்தார். அதன்பின் டைரக்டர் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் ஜோடியாக ஆர்யா நடித்திருந்தார். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரிடம் வரவேற்ப்பை பெற்றது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடினர். ஆர்யாவின் நடிப்பும் மிக யதார்த்தமாகவும், மிக இயல்பாகவும் இருந்தது.

இதற்கிடையில் பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் ஆர்யா. திருமணத்தைப் பொருத்தவரை வாயை திறக்காமலேயே இருந்துவந்தார். ஆனால் அவரது வீட்டில் ஆர்யா திருமணத்திற்காக பெண் தேடும் பட்டாளமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் கலர்ஸ் தமிழில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற தொடர் சுயம்வரத்தில் ஆர்யா அவர்கள் பங்கேற்று தனக்கான துணைவியே தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகளை நடத்தினார். ஆனால் ஆர்யா சொன்னதைப்போல அதில் பங்கேற்ற ஒருவரை கூட திருமணம் செய்யவில்லை. அதனால் அனைத்து போட்டியாளர்களுக்கும் பெரும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
அதன்பின்னர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆர்யா தனது உடன் நடித்த சாயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சாயிஷா அவர்கள் ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தார். ஒரே படத்தில் இருவரும் காதல் வயப்பட்டு அனைத்து பெரியோர்களின் ஆசிர்வாததுடன் மணமுடித்துக் கொண்டனர். ஆனால் ஆர்யா விற்கும் சயிஷா விற்கும் கிட்டத்தட்ட 16 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கிறது.ஆனால் சாயிஷா அவர்கள் வயது வித்தியாசத்தை பெரிதும் பொருட்படுத்தாது ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இருவரின் காதல் அன்பின் வெளிப்பாடாக அவர்களுக்கு இரு மாதத்திற்கு முன்னர் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது தனது குழந்தையின் பெயரை ஆரியா அவர்களே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆர்யா மகளின் பெயர் என்ன தெரியுமா? அழகிய பெயரான அரியனா. ரசிகர்களும் ஆர்யா சாயிஷா தம்பதியினரையும் அவர்களது குழந்தையையும் மனதார வாழ்த்தி வருகின்றனர்.