நயனை எப்போ கட்டிக்க போறன்னு தெரியுமா? விக்னேஷ் சிவன் சொன்ன நச் பதில்

Nayan

தென்னிந்திய திரைத்துறையில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

Nayan

நயன்தாரா சினிமாவில் மட்டும் நடிக்காமல் பிசினஸ், விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து பெரும் வெற்றி படமாக மாறி இருவரும் லாபம் பார்த்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்திலிருந்து நயனும் விக்கியும் காதலிக்க தொடங்கினர். பிறந்தநாள், அன்னையர் தினம், பெண்கள் தினம் என எந்த நாளாக இருந்தாலும் விக்னேஷ் சிவன் சமூகவலைதளத்தில் நயன்தாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இருவரும் அவ்வப்போது தனி விமானத்தில் சுற்றுலா
சென்றும் வருகின்றனர்.

nayan

அந்த வகையில், சமீபத்தில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் துபாய் சென்றனர். அங்கிருந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. கடந்தாண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தங்களது திருமணம் கூறித்து நேர்காணல் ஒன்றில் கூறுகையில், ” நாங்கள் எதையும் மறைக்கவில்லை.எங்கு சென்றாலும் அதுகுறித்து சமூகவலைதளத்தில் தெரிவிக்கின்றோம். அது போல் திருமணம் நடக்கும் போது அது குறித்து அறிவிப்போம்” என்றார்.

nayan

விக்னேஷ் சிவன் இப்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல்களும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து வெளியிட்டுக்கு தயாராகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவர் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.முன்னதாக நயன்தாராவிடமும் திருமணம் குறித்து கேள்வியெழுப்பியதற்கு அவரும், விக்னேஷ் சிவன் கூறிய பதிலே கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment