தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவர் தனக்கென ரசிகர் மன்றமோ, நற்பணி மன்றமோ வேண்டாம் என கூறினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை.

அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார், அஜித் கேசுவலாக பொதுவெளியில் நடந்து சென்றால் கூட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி விடுவர்.

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைப்பெற்ற வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து திரை வெளியிட்டுக்கும் தயாராக உள்ளது.
‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கும் புதியப்படத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜித் குறித்தான சுவரசியமான செய்தி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, அஜித்தின் 50ஆவது படமான ‘மங்காத்தா’வை பார்த்து மிரண்டு போனதாக ‘சூரரைப் போற்று’ இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” ‘மங்காத்தா’ படத்தை பார்த்தேன். அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டுபோனேன். படம் முடிந்தவுடன் இயக்குநர் வெங்கட் பிரபுக்கு படம் குறித்து இரண்டு பக்கங்கள் மெசேஜ் அனுப்பினேன். அஜித் என்ன நடிப்பு. அப்படி ஒரு வில்லத்தனம். வெங்கட் பிரபு சொல்கிறார். அஜித்தும் அப்படியே நடிக்கின்றார்” என்றார்.

முன்னதாக அஜித் – சுதா கொங்கரா கூட்டணியில் புதியப்படம் உருவாக உள்ளதாக செய்திகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது