அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் பிரமாண்ட இயக்குநரின் மகள் – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். அதிக பொருள் செலவில் எடுக்கும் இவரது படங்கள், தொழில்நுட்பங்கள் திரையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாது வசூலிலும் சாதனை படைக்கிறது.

ஷங்கர் இப்படி பிரம்மாண்டத்தை வைத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தால், அவரது மகள் அதிதி ஷங்கர் அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை கொண்டிருப்பதால் அதிதி இதில் முழு கிராமத்து பெண்ணாகவே மாறியுள்ளார். ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. படத்தில் அதிதி, நன்றாக நடித்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்பே அதிதி டாக்டராக மாறியுள்ளார். ஆம், சமீபத்தில் அதிதி தனது டாக்டர் படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்தை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். ரோஹித் சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago