தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் படங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்களின் எழுச்சியை மையமாக கொண்டு அமைந்திருக்கும். இவர் 2011 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நகைச்சுவையான காதலை மையமாக வைத்தே கதைக்களத்தை அமைத்திருப்பார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக்கை வைத்து மெட்ராஸ் என்ற படமும் வெளியிட்டார்.

இந்த படம் அடித்தட்டு மக்களின் உரிமைக்காக போராடும் படமாகவும் சென்னையில் ஒரே தெருவில் ஏற்படும் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகவும் அமைந்திருக்கும். ஆகையால் இந்த படம் வெளிவந்ததும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தட்டியது. அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என்று இரண்டு படங்களையும் கொடுத்தார்.
இந்த கதையின் மையமும் அடித்தட்டு மக்களின் உரிமைக்காக போராடும் படமாகவே அமைந்திருக்கும். இதில் ரஜினி பேசும் கபாலி டா என்ற வசனமும், நான் கோட் சூட் போடுவதுதான் உனக்கு பிரச்சனைனா நான் கோட் சூட் போடுவேண்டா, கால் மேல் கால் போட்டு உட்காரதுதான் பிரச்சினைனா நான் ஸ்டைலா ஒக்காருவேன் டா என்று திமிராகப் ரஜினிகாந் பேசும் வசனமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இவர் சில நாட்கள் பிரேக் எடுத்திருந்த நிலையில். ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கினார். கொரானா ஊரடங்கில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாமல் அந்த படம் OTTயில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இதுவரை யாரும் யோசிக்காத குத்துச்சண்டை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரமை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. விக்ரமின் 61வது திரைப்படம் என்பதால் விக்ரம்61 என்று பெயர் வைத்துள்ளதாக பேசப்படுகிறது. இப்படி இவர் தனக்கென்று தனி பாணியை உருவாக்கி படம் எடுப்பதால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இவரின்படங்கள் வெற்றி பெற்று வருகிறது . இத்துடன் இவரின் சொத்து மதிப்பு 25 கோடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.