பொழுதுபோக்கு

என்ன நெல்சன் அதுக்குன்னு இப்படியா பண்றது.. கிசுகிசுக்கும் கோலிவுட்

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு கோலமாவு கோகிலா பிடித்து போனது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இரண்டாவதாக ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கரோனா பெருந்தொற்றுக்கு பின் திரையிரங்கில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாது ரூ.100 கோடிக்கு மேல் வசூலானது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நெல்சன் தற்போது மூன்றாவதாக விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில், ‘பீஸ்ட்’ பட இயக்குநர் குறித்தான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி, ‘பீஸ்ட்’ படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டாக ஒதுக்கியது. ஆனால் நெல்சன் 80 விழுக்காடு படப்பிடிப்பு முடிவதற்குள் அந்த பட்ஜெட்டை தீர்த்து விட்டதாக தெரிகிறது. இதனால் மீதியிருக்கும் படப்பிடிப்புக்கு சன் பிக்சர்ஸ் 20 கோடி ரூபாயை எக்ஸ்ட்ரா செலலவு செய்யவுள்ளது.

மேலும் நெல்சன் படப்பிடிப்பு தளத்தில் சரியான நேரத்திற்கு வருவது கிடையாதாம். விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் வருவதகாவும் இயக்குநருக்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு படங்கள் அடுத்து அடுத்து வெற்றி கொடுத்தால் அதற்காக இப்படியா நெல்சன் கெத்து காட்டுவது என பீஸ்ட் படக்குழு அதிருப்தியில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago