நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு ‘கோலமாவு கோகிலா’ பிடித்து போனது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இரண்டாவதாக ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கரோனா பெருந்தொற்றுக்கு பின் திரையிரங்கில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாது ரூ.100 கோடிக்கு மேல் வசூலானது.
இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நெல்சன் தற்போது மூன்றாவதாக விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.
‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெல்சன் அடுத்தப்படத்திலிருந்து தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சனின் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர்கள் பலர் யோசித்து வருவதாக தெரிகிறது.
20 படங்களுக்கு மேல் நடித்து வரும் சிவகார்த்திகேயனே, ‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்கு பின் தான் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்து உள்ளார். ஆனால் அவரை வைத்து படம் இயக்கிய நெல்சன் மூன்று படங்களை இயக்கியுள்ள நிலையில், சம்பளத்தை 30 கோடி ரூபாயாக உயர்த்திருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நெல்சன் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாகவும் சன் பிக்சர்ஸ் ஒதுக்கிய தொகையை தாண்டி தற்போது படப்பிடிப்பு நடைப்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…