தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்றிரவு (ஜனவரி 17) திருமணபந்தத்தை முறித்து கொள்வதாக தனது ட்விட்டரில் தெரிவித்தார். இவர் பதிவிட்ட சிலமணிநேரத்தில், தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனது சமூகவலைதளத்தில், தனுஷை விட்டு பிரிவதாக தெரிவித்தார்.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து இன்று (ஜனவரி 18) சமூகவலைதளத்திலும் ஊடகத்திலும் விவாதத்திற்கான பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் முதல் விவகாரத்து வரையிலான விஷயங்களை சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது திடீரென ஒரு விஷயத்தை பொதுவெளியில் போட்டு உடைத்தார்..

பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், தனுஷ் -ஐஸ்வர்யா திருமணம் சர்ச்சையில் ஆரம்பித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத அளவுக்கு சிறப்பாக நடைப்பெற்றது. இவர்கள் திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துக்கொண்டு தாலி எடுத்துக்கொடுத்தார். மாலையில் திமுக முன்னாள் தலைவர் மு.க.கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார். இப்படி இரண்டு ஆளுமைகளுக்கு முன்பு இந்த திருமணம் நடைப்பெற்றது.
ஐஸ்வர்யாவின் திருமணத்தை வைத்து ரஜினியின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா தேர்தலில் தோல்வி அடைந்தற்கு ரஜினி முக்கிய காரணமாக இருந்தார். அதைத்தொடர்ந்து 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றினார். அப்போது ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி அவரை தைரிய லட்சுமி என கூறி வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின் ரஜினி – ஜெயலலிதாவுக்கு இடையே நட்பு மலர்ந்தது. இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐஸ்வர்யா – தனுஷுக்கு திருமணம் நடைப்பெற்றது. அப்போது ரஜினி ஜெயலலிதாவை சந்தித்து திருமண அழைப்பிதழ் வைத்தார். இந்த நிகழ்வின் மூலம் இன்னும் இருவருக்குமான நட்பு பிணைப்பானது.
ரஜினி மகள் ஐஸ்வர்யாவையும், நடிகர் தனுஷையும் தொடர்புபடுத்தி நிறைய பத்திரிகைகளில் கிசுசிசுக்கள் எழுதின.. அதனாலேயே ரஜினி இந்த திருமணத்தை திருமணம் செய்து வைக்க நேரிட்டது… இந்த திருமணம் கிசு கிசு திருமணம்தான் என்று ரஜினியே ஒருமுறை சொல்லி உள்ளார்.. தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.. 22 வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார். உண்மையில் ஐஸ்வர்யாவும், தனுஷின் சகோதரியும் நெருங்கிய தோழிகள்..

ஆரம்பத்தில் மீடியாவில் இவர்கள் இருவர் குறித்து சர்ச்சை செய்திகள் வெளியிட்டது.. ஆனால், தனுஷ் அதற்கு மறுப்பு சொன்னார்.. ரசிகர்கள் யாரும் நம்பவில்லை… அதற்கு பிறகுதான் இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவே பலரும் நம்பினார்கள்… பிறகுதான் உண்மை என்பதும் தெரியவந்தது. 2 குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகள் மத்தியில் உருவான இந்த காதல் விவகாரம் குறித்து இணைந்து பேசி சுமூகமாக முடிவெடுத்தனர்… இவர்கள் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் தனுஷ்.
இந்தநிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் திடீரென எளிமையான முறையில் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. தனுஷ் அப்போது வளர்ந்து வரும் நடிகர். இவர் இப்படி ரஜினிக்கு மூத்த மருமகனாக மாறியது கோலிவுட்டில் பேச்சு பொருளானது.

தனுஷ் தமிழ் சினிமாவில் கிசுகிசுகளுக்கு பெயர் போனவர். ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானர். அதன்பின் கோச்சடையான் போன்ற படங்களை இயக்கினார். 3 படத்தில் தனுஷுக்கும் ஷ்ருதிஹாசனுக்கும் இடையே நெருக்கம் உருவானது. இதை உணர்ந்த ஐஸ்வர்யா அப்படியே ரஜினியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
ரஜின் இந்த விவகாரத்தில் தலையீட்டு தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்தார். அதன்பின் த்ரிஷாவுடன் தொடர்பு, அமலா பாலுடன் தொடர்பு, சமீபத்தில் விவகாரத்து பெற்ற சமந்தாவுடன் தொடர்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதையெல்லாம் ஐஸ்வர்யா சகித்துக்கொண்டு தனுஷூடன் வாழ்ந்தாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரஜினி இருவரிடமும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது என ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தனுஷின் சகோதரனும் இயக்குநருமான செல்வராகவன் தனது ட்விட்டரில், ” தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.” என பதிவிட்டிருந்தார். எனவே செல்வராகவனுக்கு தனுஷின் இந்த முடிவு முன்பே தெரிந்திருக்கும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.