Homeடிவிஇவருக்கு கரோனாவாம்.. ஷூட்டிங் பாதியில் நின்ற 'குக் வித் கோமாளி 3' - விவரம் உள்ளே

இவருக்கு கரோனாவாம்.. ஷூட்டிங் பாதியில் நின்ற ‘குக் வித் கோமாளி 3’ – விவரம் உள்ளே

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் முதன் இரண்டு பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Vid

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவரான நகைச்சுவை நடிகை வித்யூ ராமனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

CWC

தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை வித்யூ ராமனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் திருமணமான வித்யூக்கு இது தல பொங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்