Homeடிவிகுக் வித் கோமாளி சீசன் 3: சர்பைரஸாக கலந்துக்கொள்ளும் சூர்யா பட நடிகை - விபரம்...

குக் வித் கோமாளி சீசன் 3: சர்பைரஸாக கலந்துக்கொள்ளும் சூர்யா பட நடிகை – விபரம் உள்ளே

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

CWC

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.

Bharthi

‘குக் வித் கோமாளி சீசன் 3’யில் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி ஹரிப்ரியன், சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரோஸ் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் இவர்களுடன் கோமாளிகளாக பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக நடிகை ஸ்ருத்திகா கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ’ படத்தில் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்