சின்னத்திரையில் 2000ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரபலமாக ஒளிப்பரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி லொள்ளு சபா. படங்களை கலாய்த்து ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் நடித்தவர்கள் இப்போது சினிமாவிலும் நகைச்சுவைகளில் கலக்கி வருகின்றனர்.
லொள்ளு சபா நிகழ்ச்சியிலிருந்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில், முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக வந்து இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மையுடன் சினிமாவில் வலம் வருகிறார்.
சந்தானத்திற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியிலிருந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பின் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பின் பலனாக இப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

யோகிபாபுவின் கால்ஷீட் கேட்டு பல இயக்குநர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். யோகிபாபு சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டப்பட்டது. அதில், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் யோகிபாபுவின் அண்ணன் எனக்கூறி சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்தப்புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் சக்தி யோகி ராஜா. இவர் கோவில் கட்டி ஆன்மீகத் தொண்டு செய்து வருகிறாராம். அதுமட்டுமல்லாது வார இறுதி நாள்கள்,பெளர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் பக்தர்களுக்கு அருள் வாக்கும் சொல்லி வருகிறாராம்.

இப்படி சக்தி யோகிராஜாவின் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இவரும் யோகிபாபும் பார்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாக கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.