சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பாலசரவணன். சசிகுமார் நடிப்பில் வெளியான ‘குட்டிபுலி’ படத்தின் மூலம் பாலசரவணன் தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார்.
‘குட்டிபுலி’ படத்தை தொடர்ந்து பாலசரவணன் ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். தற்போது கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘டான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலசரவணன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலசரவணன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டயட்டிங் தொடங்கி 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 கிலோ குறைந்துள்ளேன் மித்ரன் ப்ரோ நன்றி. மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
பாலசரவணன் இந்தப்புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இப்புகைப்படத்தை பார்த்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…