பொழுதுபோக்கு

இது மிஸ்ஸே ஆகாது. ‘வலிமை’ தயாரிப்பாளரின் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வந்தப்படம் “வலிமை”. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

“வலிமை” படத்தின் பூஜைக்கு பின் எந்தொரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினார். அதுமட்டுமல்லாது பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை “வலிமை அப்டேட்” கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஒரு கட்டத்தில், ரசிகர்கள் சிலர் கடவுள் முருகனிடமே “வலிமை அப்டேட்” கேட்டு போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர். இப்படி போகும் இடமெல்லாம் “வலிமை அப்டேட்” ரசிகர்களுக்கு, படக்குழுவினர் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

புத்தாண்டு கொண்டாட்டமாக சமீபத்தில் வெளியான “வலிமை” படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், பைக் ஸ்டண்ட், சேசிங் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது ஒமைக்கரான் பரவல் காரணமாக பல மாநில அரசுகள் ஊரடங்கு, திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த படங்கள் வெளியிட்டு தேதியை மாற்றிவைத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் வலிமை படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.போனிகபூரின் இந்த அறிவிப்பால் அஜித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago