இவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து, என்ன ஆச்சி இவருக்கு? ஏன் இப்படி மாறிட்டாரு என புலம்பும் ரசிகர்கள்.

குட்டி நயன்தாராவாக ரசிகர்கள் அழைத்து வரும் குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்திரனின் சமீபத்திய புகைப்படங்களால் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இப்படத்திற்கு பின் ரசிகர்கள் இவரை அஜித்தின் ரீல் மகளாகவே ஏற்றுக்கொண்டனர்.

அனிகா திரைப்படங்களில் மட்டுமல்லாது மாடலிங், விளம்பரம் உள்ளிட்ட துறைகளில் கலக்கி வருகிறார். மேலும் சமூகவலைதளத்திலும் அனிகா ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இங்கு இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது வாடிக்கையான ஒன்றாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான அனிகாவிற்கு தற்போது 17 வயதாகிறது. இவரது சமூகவலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

சமூகவலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களில் இளம் நடிகையாக இருக்கும் அனிகா, முக அமைப்பில் நயன்தாராவை போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இவரை குட்டி நயன்தாராவாகவே பார்க்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், அனிகா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் பழையது போன்று முகத்தில் பொலிவின்றி, உடல் மெலிந்து காணப்பட்டதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கமெண்ட்டில் அனிகாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதுடன் மீண்டும் பழைய அனிகாவை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

என்னதான் ஆச்சு நம்ம குட்டி நயனுக்கு….நலம் விசாரிக்கும் ரசிகர்கள்

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago