நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
‘பிக்பாஸ் சீசன் 5’-இன் இறுதி நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 16) ஒளிப்பரப்பானது. இதில் ‘பிக் பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் கோப்பை புதிய வெற்றியாளருக்கு முந்தைய வெற்றியாளர் வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சீசன் 5 டைட்டில் வின்னருக்கு வழங்க ஆரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இது குறித்து ஆரி தனது ட்விட்டரில், ” பிக் பாஸ் சீசன் 5 ஃபனல்ஸூக்கு நான் வரவில்லை. வருத்தம் வேண்டாம். நானும் ஆவலுடன் போட்டியாளர்களையும், உங்களையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இம்முறை பிக் பாஸ் குழுவின் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என பதிவிட்டிருந்தார்.
ஆரி பதிவிட்ட சில மணிநேரத்திலேயே பாலஜி தனது சமூகவலைதளப்பக்கத்தில், பொதுமுடக்கம் காரணமாகவும் கரோனா பரவல் கராணமாகவும் அதிக அளவில் யாரையும் கூப்பிடவில்லை. என ட்வீட் செய்திருந்தார். இதைப்பார்த்த ஆரி ரசிகர்கள் பாலாஜியை வசை பாட ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி ரசிகர்களும் ஆரியையும் ஆரி ரசிகர்களையும் திருப்பி திட்ட ஆரம்பித்தனர்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரிக்கு இணையான போட்டியாளராக பாலாஜி இருந்துவந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டில் ஆரியும் பாலாஜியும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தனர். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியபோதும் பாலாஜி ஆரியை விட ஒரு படி முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியாக பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை ஆரி தட்டிச்சென்றார்.
சமூகவலைதளத்தில் ஆரி – பாலாஜி ரசிகர்கள் ஒருவரை விஜய் – அஜித் ரசிகர்கள் ரேஞ்சுக்கு திட்டி தீர்த்தால் என்னவோ நேற்று (ஜனவரி 16) இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங் ஆக தொடங்கியது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…