பிக் பாஸ்

அழைப்பு இல்லை…வரவில்லை. கோபத்தில் ஆரி ரசிகர்கள் – பிக் பாஸில் நடந்தது என்ன?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.

நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சி இன்று (ஜனவரி 16) மாலை ஒளிப்பரப்பாகிறது.

பிக் பாஸ் சீசன் 5 வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வழங்கும் விழாவிற்கு பிக் பாஸ் சீசன் 4 வின்னர் ஆரியை அழைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பை புதிய வெற்றியாளருக்கு முந்தைய வெற்றியாளர் வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சீசன் 5 டைட்டில் வின்னருக்கு வழங்க ஆரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து ஆரி தனது ட்விட்டரில், ” பிக் பாஸ் சீசன் 5 ஃபனல்ஸூக்கு நான் வரவில்லை. வருத்தம் வேண்டாம். நானும் ஆவலுடன் போட்டியாளர்களையும், உங்களையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இம்முறை பிக் பாஸ் குழுவின் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ஆரியின் ரசிகர்கள் பிக் பாஸ் குழுவினர் மீது கோபத்தில் உள்ளனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago