Homeடிவிமுதலில் கண்ணம்மா..இப்போ வெண்பா.. என்னதான் ஆச்சு பாரதி கண்ணம்மா - எதிர்பார்பில் ரசிகர்கள்

முதலில் கண்ணம்மா..இப்போ வெண்பா.. என்னதான் ஆச்சு பாரதி கண்ணம்மா – எதிர்பார்பில் ரசிகர்கள்

சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.

Bharthi

‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ஹிட் அடிபதற்கு வேறொரு காரணம் வில்லி கதாபாத்திரமான வெண்பாவாக ஃபரினா நடிப்பும் கூட. இவரது வில்லத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ஆண் குழந்தை பெற்ற இவர், ஓய்வுக்கு பின் தற்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஃபரினா வேறொரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பாரதி கண்ணமா சீரியலில் இருந்து வெண்பா முற்றிலும் விடுவிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.

Bharathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் வெண்பாவின் வில்லத்தனம் குறித்து தற்போது மெல்ல மெல்ல தெரிந்து கொள்கிறார். எனவே அவர் கண்ணம்மாவுடன் வாழ்வதற்கு விரைவில் சம்மதம் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சற்று முன்