Homeபொழுதுபோக்குஅஜித் 61 வெளியான அப்டேட் என்னானு தெரியுமா?

அஜித் 61 வெளியான அப்டேட் என்னானு தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தனக்கென ரசிகர் மன்றமோ, நற்பணி மன்றமோ வேண்டாம் என கூறினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை.

ajith

அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார், அஜித் கேசுவலாக பொதுவெளியில் நடந்து சென்றால் கூட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி விடுவர்.

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இது அஜித்துக்கு 60ஆவது படமாகும். நீண்டநாள்களாக படப்பிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில், இறுதியாக திரைக்கு வர தயாராக உள்ளது.

ajith

அதனைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்னிட்டு ‘வலிமை’ ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகள் காரணமாக வலிமை வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித்தும் ஹெச். வினோத்தும் மீண்டும் கூட்டணி வைத்துள்ளனர். அஜித்தின் 61ஆவது படத்துக்கான படப்பூஜை விரைவில் போடப்பட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.

ajith

அஜித்தின் 61ஆவது படமும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டுள்ளதால், இதில் அஜித் ஸ்மார்ட் அண்ட் ஸ்டைலிஷாக இதுதோன்ற இருப்பதாகவும் அதற்காக இப்போது இருந்தே உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று ஓர்க் அவுட் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்