முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகமே அவரைத் திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து புகழ்பெற்ற பல ஹீரோக்களுடன் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

இவர் திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் பலவித எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார். இவரின் கருமை நிறம் காரணமாகவே பலராலும் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் தற்போது வெள்ளையாக, அழகாக இருக்கும் நடிகைகளை விடவும் நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு தகுந்த வகையில் தன்னையும் உயர்த்தி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாகவே திரை உலகிகில் நடிக்க வந்துள்ளார். இவருக்கு இரண்டு அண்ணன்கள் இருந்த நிலையிலும் தனது குடும்பத்தை தான் மட்டுமே தூக்கி நிறுத்த வேண்டும் என்ற பெரிய பொறுப்பிற்கு ஆளானார்.

இவ்வாறு தனது திரைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிடைத்த ஏதேனும் ஒரு கதாபாத்திரம் நடத்திவிட்டு செல்பவராக இல்லாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தொடர்ந்து விக்ரம், விஜய் சேதுபதி தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கனா என்ற படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து ரசிகர்கள் மனதிலும் மிகுந்த வரவேற்பை பெற்றார். இப்படம் கிரிக்கெட் தொடர்பானதாக இருந்தாலும் இதன் ஆழமான கருத்து விவசாயம் என்றும் அழியக் கூடாது என்பதுதான் இதனையே சற்று சுவாரசியமான கதை களத்துடன் கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இது ஒரு பக்கமிருக்க பல ஹீரோயின்களும் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள். அவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷூம் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இவ்வாறு இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதில் இவர் எப்பொழுதும் போல குடும்பப் பாங்காக இல்லாமல் வேறுவித அட்டகாசமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் என்ன பட வாய்ப்பிற்காக இவ்வாறு கிளாமரில் இறங்கி விட்டார்களா? என்றும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பக்கமாக சட்டையை சற்று கீழே இறக்கி போஸ் கொடுத்துள்ள போட்டோவிற்கு பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்து வருகிறார்கள்.