ஐஸ்வர்யா இலட்சுமிக்கும் 96 பட இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு உறவா? நெருக்கமாய் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.

சமீப காலமாக நடிகைகள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் பலவித நிகழ்வுகளை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவிடுகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. அதற்க்கு காரணம் அந்த புகைப்படத்தில் அவரோடு இருக்கும் நபர் தான்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி. இதற்க்கு முன்பு இவர் பல மலையாள படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரு ரெஸ்டாரன்டில், 96 படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

மலையாளத்தில் வெளியான பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள கோவிந்த் வசந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சோலோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு 96, அசுரவதம், உறியடி, சீதகாதி இப்படி பல்வேறு படங்களுக்கு இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான நவரசாவில் கூட இவரது இசை இடம்பெற்றிருந்தது.

அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா இலட்சுமி தனக்கும் கோவிந்த் வசந்தாவிற்கும் இடையே இருக்கும் உறவுமுறை பற்றி மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் கோவிந்த் வசந்தாவை அண்ணா என்று குறிப்பிட்டுளளார். இதன் மூலம் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரிகிறது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago