சமீப காலமாக நடிகைகள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் பலவித நிகழ்வுகளை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவிடுகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. அதற்க்கு காரணம் அந்த புகைப்படத்தில் அவரோடு இருக்கும் நபர் தான்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி. இதற்க்கு முன்பு இவர் பல மலையாள படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரு ரெஸ்டாரன்டில், 96 படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

மலையாளத்தில் வெளியான பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள கோவிந்த் வசந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சோலோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு 96, அசுரவதம், உறியடி, சீதகாதி இப்படி பல்வேறு படங்களுக்கு இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான நவரசாவில் கூட இவரது இசை இடம்பெற்றிருந்தது.

அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா இலட்சுமி தனக்கும் கோவிந்த் வசந்தாவிற்கும் இடையே இருக்கும் உறவுமுறை பற்றி மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் கோவிந்த் வசந்தாவை அண்ணா என்று குறிப்பிட்டுளளார். இதன் மூலம் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரிகிறது.