Homeபொழுதுபோக்கு6 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்குள் வரும் ரஜினியின் மகள். என்ன படம், எந்தெந்த மொழி...

6 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்குள் வரும் ரஜினியின் மகள். என்ன படம், எந்தெந்த மொழி தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் அவர் படங்கள் இயக்குவதிலும் கைதேர்ந்தவர். அவருடைய இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம்தான் 3. இப்படம் மிகவும் வித்தியாசமான திரைக்கதையை கொண்டு எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் சிவகார்த்திகேயனும் தனுசுடன் நடித்திருப்பார்.

dhanush
dhanush

பள்ளிப்பருவத்திலேயேஹீரோ மற்றும் ஹீரோயின் காதல் கொண்டு பின்னர் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்வார்கள். பின்னர் தனுஷின் பெற்றோர்களான பிரபுவும் பானுப்பிரியாவும் அவர்களது திருமணத்தை ஏற்று தனது வீட்டில் அனுமதித்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை மிகவும் அழகாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தனுஷிற்கு எதிர்பாராதவிதமாக ஒரு மனநோய் ஏற்படும் இதனால் மிகவும் துன்பப்படும் தனுஷ் ஒரு கட்டத்தில் ஸ்ருதி ஹாசனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை பிரித்துகொள்வார். இவ்வாறாக இத்திரைப்படத்தின் கதைகளும் அமைந்திருக்கும்.

3 திரைப்படத்திற்கு பிறகு வை ராஜா வை என்ற படத்தையும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்படமும் மிகவும் வித்தியாசமான கதைக்களம். கார்த்தியின் மகனான கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்திருப்பார்கள். சூதாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். கௌதம் கார்த்தியும் தனது நடிப்பாற்றலை நன்கு மெருகூட்டி இருப்பார். இப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்.

siva
siva

கிட்டத்தட்ட 6 வருட காலம் ஐஸ்வர்யா தனுஷ் திரைப்படம் எதுவும் இயக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு ஒரு டாக்குமெண்ட்ரி மட்டுமே இயக்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் லைக்கா நிறுவரம் ட்வீட் செய்துள்ளது. இந்த படம் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் அந்த டிவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டும் அல்லாமல் இந்த படம் இரு மொழி படமாக, அதாவது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் இருக்கும் என்றும், இந்த படத்தின் கதையை ஐஸ்வர்யா தனுஷ் எழுதவில்லை என்றும் ஸ்கிரிப்ட் பணிகளை சஞ்சீவ் என்பவர் செய்யவிருக்கிறார் என்றும் அந்த டீவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்