Homeபொழுதுபோக்குஉங்களுக்கு இத்தனை குழந்தைகளா..ரம்பாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

உங்களுக்கு இத்தனை குழந்தைகளா..ரம்பாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

தமிழில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்பா. அதன்பின் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் ரம்பா தோன்றினார். இதன் மூலம் 90’ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவராக ரம்பா இருந்தார்.

Ramba

‘செங்கோட்டை’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘மின்சார கண்ணா’, ‘ஆனந்தம்’, ‘மிலிட்டரி’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ரம்பா முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினார், இப்படி படவாய்ப்புகள் குவிந்த இருந்த ரம்பாவிற்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் திரைத்துறையை விட்டு விலக வேண்டிய நிர்பந்தமும் வந்தது. அதன் பின் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துக்கொண்டார்.

Ramba

ரம்பா 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் தற்போது கனடாவில் வசித்து வருகின்றனர்.

ரம்பா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்பா வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Ramba

ரம்பாவின் குடும்பபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களே இன்னும் குழந்தை தனமாக இருங்கீங்க. உங்களுக்கு மூன்று குழந்தைகளா என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சற்று முன்