தமிழ் சினிமாவில் கற்க கசடற என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. வசீகரிக்கும் முகம், அழகு மேனி என முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது.

ராய் லட்சுமி தமிழ் சினிமாவிலயே அறிமுகமானதால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் இருந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையிலும் நடித்துள்ளார்.
மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு காலத்தில் மல்லுவுட்டில் முன்னணி நடிகையாகவே வலம் வந்தார். இப்படி பிஸியாக இருந்த ராய் லட்சுமிக்கு அதன் பின் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தது. அதிலும் சில படங்களில் கவர்ச்சி நடனம், சிறு கதாபாத்திரம், கெளரவத் தோற்றம் என வாய்ப்புகள் வந்தன.

திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்து போனதால் ஜோதிடத்தை நம்பிய ராய் லட்சுமி தனது பெயரையே மாற்றிவைத்தார். முன்னதாக லட்சுமி ராய் என இருந்தது. படவாய்ப்புகளுக்காக சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது பிகினி உடை, நீச்சல் குளத்தில் இருந்தாவறு புகைப்படங்கள் என பதிவிட்டு ரசிகர்களின் மூச்சை ஏகிறவைப்பார்.
நீச்சல் குளத்தில் இருந்தவாறு ராய் லட்சுமி சமூகவலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவதும் உண்டு. இவரை ரசிகர்கள் வாட்டர் பேபி என்றும் அழைப்பது உண்டு. இந்நிலையில், ராய் லட்சுமி சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனதை கொள்ளை கொண்டு சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.