மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் வரும் பாடலில் இவர் கண் அடிக்கும் ஸ்டைலில் ஓவர் நைட்டில் ஓபாமா ஆனார். படத்தில் பள்ளி மாணவியாக நடித்த பிரியா வாரியருக்கு மலையாள சேட்டன்ங்கள் முதல் சேட்டு வீட்டு பாய் வரை ரசிகராக மாறினர்.

அதைத்தொடர்ந்து பிரியா வாரியர் தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து திரைத்துறையிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். இறுதியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான ‘ஸ்ரீ தேவி பங்களா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் ட்ரெய்லரும் வெளியானது. அதில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் பிரியா வாரியர் நடித்திருந்தார்.

இந்நிலையில், ‘ஸ்ரீ தேவி பங்களா’ படத்தின் ட்ரெய்லரை பார்த்த ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் எனவும் படம் வெளியானால் ஸ்ரீ தேவியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் படம் வெளியாகமால் உள்ளது.
ஒரு காலத்தில் பிஸியாக நடித்து வந்த பிரியா வாரியர் தற்போது பட வாய்ப்பு ஏதும் இன்றி போட்டோ ஷூட் எடுத்து வருகிறார். அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்கும் பார்த்து கொள்கிறார்.

சமீபத்தில் கடற்கரையில் பிரியா வாரியர் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தனது அழகை காட்டி இயற்கை அழகை ரசிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.