வித்தவுட் மேக்கஅப்பில் நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் – மகிழ்ந்த ரசிகர்கள்

keerthi

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் மூன்றவது அலை ஆரம்பித்துள்ளது. இதில் திரைப்பிரபலங்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குஷ்பு, மம்முட்டி, மகேஷ்பாபு, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கரோனா தொற்றுக்கு கிச்சை பெற்று வருகின்றனர்.

keerthi

அந்தவகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஜனவரி 11ஆம் தேதி தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவைபார்த்த ரசிகர்களும் பிரபலங்கள் விரைவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும் என வாழ்த்திவந்தனர்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “இன்றைய நாளில் நெகட்டிவ் என்பது பாசிட்டிவான ஒரு வார்த்தையாக மாறியுள்ளது. எனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் அன்புடன் நன்றி. உங்கள் அனைவருக்கும் அன்பான பொங்கலாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார். மேலும் மேக்கஅப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களையும் கீர்த்திசுரேஷ் பதிவிட்டுள்ளார்.

keerthi

மேக்கஅப் இல்லாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

Leave a Comment