தமிழ் சினிமாவில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தேவயானி. இவர் ‘காதல் கோட்டை’ படத்தில் ‘கமலி’ கதாபாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் எளிதல் மறந்திருக்க மாட்டர்கள்.
தேவயானி தமிழ் சினிமாவில் ‘தொட்டாசினிங்கி’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் அவர் அதிகமாக கவர்ச்சி காட்டியிருந்தார். அப்படத்தை தொடர்நது அஜித், பிரசாந்த் நடித்த ‘கல்லூரி வாசல்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருந்தார்.
அதன்பின் வாயப்புகள் இல்லாமல் இருந்த தேவயானிக்கு சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளியான ‘சிவசக்தி’ திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தேவயானி குட்டப்பாவடை அணிந்து கவர்ச்சியாக ஆடியிருப்பார்.
இதற்கிடையில் ஒளிப்பதிவாளராக இருந்த தங்கர்பச்சான் தேவயானிக்கு ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இந்த படத்திலிருந்து தேவயானிக்கு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், சிவசக்தி திரைப்படம் சில காரணங்களால் தாமதமாக திரையரங்கில் வெளியானது. அதில் தேவயானி கவர்ச்சி நடனமாடியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திரையில் தனக்கென ஒரு இடத்தை தேவயானி உருவாக்கி வந்த நேரத்தில் இந்த குத்தாட்டம் அவரை வெகுவாக பாதித்தது. அன்று அவர் இனி இது போன்று கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டார். அதுபோலவே அன்று முதல் இன்று வரை தேவயானி குடும்ப பெண்ணாகவே ரசிகர்கள் மனதில் வலம் வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் இல்லாதல் தேவயானி தற்போது சின்னத்திரையில், சீரியல்களில் நடித்து வருகிறார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…