தமிழ் சினிமாவில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் மதராசபட்டினம். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து எமி ஜாக்சன் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆங்கிலம் மட்டுமே பேசிவந்த எமி ஜாக்சன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தால் ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டு நடிகையாகவே ஏற்றுக்கொண்டனர். எமி ஜாக்சன் தமிழ் மட்டுமல்லாது இந்தி உள்ளிட்ட வேறு மொழிகளிலும் படங்கள் நடித்தார்.

இந்நிலையில், எமிஜாக்சன், தனது ஆண்நண்பரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வழந்துவந்தனர். அந்த நபரை விரைவில் திருமணம் செய்துகொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பகவே எமி ஜாக்சன் அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவானர்.

குழந்தையுடன் எமி ஜாக்சன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அந்த நபரை எப்போது திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்த்த வேலையில் அவருடனான காதலை முறித்துக்கொண்டதாக எமி அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து ரசிகர்கள் அந்த குழந்தையை என்ன செய்வீர்கள் என சமூகவலைதளங்கள் வழியாக கேள்வியெழுப்பியதற்கு அது எங்கள் அன்பின் நினைவு பரிசு. அவனை நானே வளர்த்துக்கொள்வேன் என் கூறினார். எமிஜாக்சனின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தையை தனியாக வளர்க்க முடிவுசெய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் என கருத்து பதிவிட்டனர்.