விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வராததல் ரசிகர்கள் ஏமாற்றில் உள்ளனர்.

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக விஜய் திகழ்கிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பிறமாநிலங்களில் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். விஜய் எந்த கிசுகிசுப்பிலும் இதுவரை சிக்காதவர். தன் குடும்பத்தை அதிக அளவில் விஜய் நேசிபது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமல்லாது விஜய் தனது அம்மா ஷேபாவை அதிக அளவில் அன்பு செலுத்துகிறார். அதே போல் ஷோபாவும் விஜய்யை அதிக அளவில் அன்பு செலுத்துகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது சிறு வயதில் தனது அம்மா ஷோபாவிற்கு சால்வை போதிய அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது, பழைய புகைப்படமாக இருந்தாலும், தற்போது விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.