விஜய் இதுவரை பிற மொழி படங்களில் நடிக்காதற்கு காரணம் என்ன தெரியுமா?

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

vijay

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

பொதுவாக சினிமாவில் வரும் நடிகர், நடிகைகள் தங்களது சொந்த மொழியில் நடிக்கும் படங்கள் ஹிட்டாகிவிட்டால் அடுத்தாக பிற மொழி பேசும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விடுவர். தனுஷ் தற்போது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் கால்பதித்துள்ளார்.

vijay

ஆனால் விஜய் மட்டும் இதுவரை பிறமொழிப்படங்களில் நடித்து இல்லை. நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டவில்லை. காரணம் பிற மொழிகளில் இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதையம்சம் இருப்பதால் அதை விஜய் தவிர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது இங்கு கிடைக்கும் மரியாதை அங்கு கிடைக்காது என்பதால் வேறு மொழி திரைப்படத்தில் நடிப்பதை விஜய் தவிர்த்து வந்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

vijay

இந்தநிலையில், இப்போது விஜய் நேரடியாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 66’ படத்தில் நடிக்க தயராகிவருகிறார். தனக்கு பின் வந்தவர்களே தெலுங்கு, இந்தி போன்ற திரைப்படங்களில் நடிக்கும் போது நமக்கும் நிச்சயம் அங்கு மார்க்கெட் இருக்கும் என நம்பி, ‘தளபதி 66’ படத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment