பொழுதுபோக்கு

அம்மா பரிசு சென்டிமென்டான சிம்பு – அது வந்த நேரம் ஒரே ஏறு முகம் தான்

தமிழ் திரையுலகில் காதல் கிசுகிசுக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை வைத்து படம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல என சிம்புவைத்து படம் இயக்குநர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை இவர் மீது அடுக்கு அடுக்காக வைப்பதும் வழக்கமான ஒன்றுதான். அந்த அளவுக்கு சினிமாவில் சிம்பு அனுபவிக்காத பிரச்சினைகளே இல்லை என்று சொல்லலாம்.

பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு மிகக் கடுமையாக சிம்பு உழைத்தார். சிம்புவுக்கு நீண்டநாள்களுக்கு பின் பெயர் வாங்கி கொடுத்தப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.’மாநாடு’ படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘மாநாடு’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தாக கெளதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிம்பு ‘பத்து தல’, ‘கொரனா குமார்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிம்புக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம் தனது தாய், தந்தை தான் என கூறினார். அதோடு மட்டுமல்லாது எனது இந்த வளர்ச்சி புகழுக்கு என் அம்மா பரிசளித்த காரும் தான் என கூறினார். சிம்புவின் பிறந்தநாளுக்கு அவரது அம்மா மினி கூப்பர் காரை பரிசளித்திருந்தார்.

தற்போது சிம்பு எங்கு சென்றாலும் அந்த காரை தான் எடுத்து சென்று வருகிறார். இந்த கார் வந்ததுக்கு பின் மாநாடு திரைப்படம் வெற்றி பெற்று சிம்புவின் சம்பளம் ரூ.20 கோடி உயர்ந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வெளியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago